Rs. 5400 Original price was: Rs. 5400.Rs. 4590Current price is: Rs. 4590.
Out of stock
Out of stock
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு சிறந்த புத்தகம். போரைப் போன்ற ஒரு அதீத சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் எவ்வாறு சிந்திப்பார்கள் நடந்துகொள்வார்கள் என்பதைக் குறித்து ஆழ்ந்த நேரடித் தகவல்களை இது தருகிறது. சண்டை, காதல், வீரம், சோகம், புதிர் என்ற அனைத்தும் இதில் நிரம்பியுள்ளது. சுருங்கச் சொல்வதெனில் இது சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
1936-1939-ல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது