LKR. 630 Original price was: LKR. 630.LKR. 535Current price is: LKR. 535.
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன.
என்னைத் தேடிக் கண்டடைய முடியும் எனில் அது எனது கவிதைக்குள்ளிருந்துதான் சாத்தியம். ஏனெனில், நானும் என் கவிதைகளும் வேறு வேறல்ல. என் மொழி கவிதை மொழி. எனது அடையாளமும் அதுவே. வாழ்வின் கசப்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதும் கவிதைகளே.
கவிதையும் நானும், கதைகளும் நானுமாக எஞ்சி நிற்கும் மீதமுள்ள என் வாழ்வு.
– மனுஷி
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us