கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க...
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த,...
ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை கருத்துரை ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. “96” திரைப்பத்தின்...
நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக் கதைகளை உருவாக்க முடியும். – முன்னுரையில் இயக்குனர் ஜி. வசந்தபாலன்
நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்....
பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை...
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை. ஆனால் அதே சமயம் நாம்...
எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக...
பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை...
நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட...
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இது தான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி...
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ...
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ...
உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது. போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப்...
கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும்...
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது...
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது,...
இந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள்...
சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும்...
தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே. அராத்துவின்...
போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும்...
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து...
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது...
இன்றைய நவீன யுகத்தின் ஆண் – பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன....