“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், அதே விளைவுகளைத்தான் தொடர்ந்து பெறுவீர்கள். நீங்கள் முன்பு சாதித்திராவற்றை சாதிக்க வேண்டும்மென்றால், முன்பு முயற்சித்திராதவற்றைச் செய்யத் துணிய வேண்டும். எல்லோரும் நடக்கின்ற பாதையில் நீங்கள் நடந்தால்...
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள்...
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்....
மூச்சுமுட்ட வைக்கும் நிகழ்நேர சாகசம்” – சான் பிரான்சிஸ்கோ க்ரானிக்கல் ஒரு பழங்கால ரகசிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய பேரழிவு ஆயுதம் சிந்திக்கவியலாத ஒரு இலக்கு உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு சின்னவியலாளர் ராபர்ட்...
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை...
‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ நூலாசிரியரிடமிருந்து இன்னுமொரு வெற்றிப் படைப்பு. தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி...
சொற்களுக்கான பொருள்களை அறிந்து கொள்வதில்தான் படைப்பிற்கான வளர்ச்சி அடங்கியிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொட்டு தமிழ் இலக்கிய உலகம் சந்தித்திருக்கிற சொற்களை இந்நூலாசிரியர் கலைச்சொற்களாகப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். இது தற்கால வாசகர்களுக்கு, இன்மையைத் தேடி ஓடுவதைப்...
இந்த வாழ்வின் இயக்கம், அதன் இடையறாத முன்னகர்வு தொடர்ந்து வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. கானகம்போல தவிர்ப்பதற்கு இயலாத ஒரு அழைப்பை வாழ்க்கையின் குரலில் உணரமுடிகிறது. இம்சை, காயம், வலி, முனகல், நம்பிக்கை, உற்சாகம், பிரகடனம், இசை,...
இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு. நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது “தோட்டியின் மகன்”. தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய...
ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது, தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து...
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள்,...
புத்தாயிரத்தில் ஆரம்பித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறைமீது அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பல்வேறு வகையில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற...
இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வழக்கமான கதைகளின்...
உங்கள் மனத்தின் அதிசய சக்தியைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான கையேடு! கடந்த 70 ஆண்டுகளில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுள்ள நூல்! கிளாடு எம். பிரிஸ்டல் எண்ணங்களின் இயல்பு மற்றும் ஆழ்மனத்தின் ஆற்றல் குறித்துச் சொந்தமாக ஏராளமான...
தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார். – ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ் கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக...
உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள...
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை,...
தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை...
இமயமலை பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்தபோது மிரண்டு விட்டேன். ஒரு Charles Bukowski கதைக்கு நிகரான கதை இது. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகனைத்...
சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக்...
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது;...
இருத்தலை ஊதி இடம் நகர்த்தும் காற்றின் பாதை மெல்ல நகர்கின்றது அந்தரமான வாழ்வின் இரேகைகள் அடங்கிய இரகசியங்கள் அறிப்படாமலும் புரியப்படாமலும் தரை மோதியே அழிகின்றன காற்றை விழுங்கிய வளிக்குமிழிக்குள் எவ்வளவு காற்று மூச்சுத் திணறியிருக்கும்...
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை...