இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான, கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை...
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த...
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற...
முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை....
எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது. ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ,...
கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன....
புத்தம் வீடு, எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில்...
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப்...
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான்...
வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும்...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
வாழ்வின் தனிமையை, அதன் பன்முக நெருக்கடிகளை – ஆழ் மனம் சார்ந்தும், புறச்சூழல் சார்ந்தும் – தீவிரத்துடன் அலசுபவை ஹாருகி முரகாமியின் படைப்புகள். அதேபோல, கிழக்காசிய மனித வாழ்வில் மேற்கத்திய கலாச்சாரத்தின் நிழல் படிவதை...
ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம்...
தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்....
வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்.
அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும்...
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை...
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று...
பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது...
அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி,...
நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து...
நீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக்...
கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும்...
உலகளவில் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான நூல் . ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டுசென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும்...
சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான...
வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே. – ஆலன் ஃபாக்ஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக...
நான் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் ரசித்து உணர்ந்த பாடல்களின் வரிகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த ‘மடை திறந்து’. ஒரு கவிஞனின் எழுத்தை ஆராயாமல் அப்படியே ரசித்து விடுவது ரசனை, அதனை ஆராய்ந்து...