ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக் காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில் ‘கடலுக்கு அப்பால்’ மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. வெறுமையான எளிமையாக...
ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது மேதைமையை, கலைநயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவில் புதிர் தெள்ளென அவிழ்ந்துவிடுவதில்லை. புரிந்ததைப் போலவும் இருக்கிறது, புரியாததைப் போலவும் இருக்கிறது. இந்தத்...
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு...
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின்...
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய...
களத்தூர் கண்ணம்மா, பாசமலர், திரைப்படங்களை இயக்கிய ஏ. பீம்சிங்கின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல். வெகுஜன தளத்தில் இலக்கியபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன்; அதற்குத் துணைநின்ற படைப்புகளில்...
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். சிரஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்....
‘அழகி’, ‘தென்றல்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. மனிதனின் அக வேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளை சமன் செய்வதே வாழ்வின் சவால். 70களில்...
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற...
நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால்...
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி...
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்’ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின்...
18வது அட்சக்கோடு ஒருவரலாற்று நாவல் – சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு செய்கிறது. தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கிப் பார்க்கும் ஒரு...
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத...
நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு...
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு...
மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து ‘மிருகங்கள் தத்துவ’த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன. ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும். 1....
சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத்...
இந்த புத்தகத்தை முதல் தடவை வாசிப்பவர்களுக்கு கட்டாயம் இது நாவலா அல்லது எவ்வகையினை சேர்ந்தது என்ற குழப்பம் வரும் என நினைக்கிறேன். ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரே சமயம் கொண்ட...