“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை...
ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுஜாதாவின் முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் இந்த ‘சொர்க்கத் தீவு’. அய்ங்கார் என்கிற கம்ப்யூட்டர் எஞ்சினியர் சொர்க்கத் தீவு என்கிற ஒரு விசித்திரப் பிரதேசத்துக்குக் கடத்தப்படுகிறான். அந்த...
ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர், வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈரோடு...
இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும்...
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . “தண்ணீர்” சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால்...
வ.கௌதமனின் ‘மகிழ்ச்சி’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. குமரி மாவட்டத்திலுள்ள இரணியல் செட்டியார் என்ற ஒரு சமுகத்தின் சமுக, கலாச்சார வாழ்வை வெகு விஸ்தாரமாகச் சொல்கிறது. “தலைமுறைகள்”. “திரவி” என்ற திரவியத்தின் பார்வையில்...
அலைந்து திரியும் ஒருவன் தற்செயலாய் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றான். அவளின் மர்மம் நிறைந்த பின்புலம் அறியாமலே அவளோடு தென்கிழக்காசியா சுற்றித் திரியத் தீர்மானிக்கின்றான். இப் பயணத்தின் தூண்டலால் அவனுக்குள் கட ந்த கால நினைவுச்...
கல்லூரிக்குப் போகிற பெண் கர்ப்பமானால் என்ன ஆகும்? இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களை, இயல்பு மாறாமல், வெகு யதார்த்தமாக, சுவாரஸ்யமான நாவலாகத் தந்திருக்கிறார் சுஜாதா.
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு. நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது “தோட்டியின் மகன்”. தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய...
புத்தாயிரத்தில் ஆரம்பித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறைமீது அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பல்வேறு வகையில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற...
தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை...
நாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதை சொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான...
முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப் போல, சங்கப் பழமையின் பல பாவனைகளின் வழியே மனோஜ் குரூர் சஞ்சரிப்பது கண்டு நான் அதிசயப்பட்டேன். இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலபடுத்தும்...
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம்...
நவீன கிட்லர்களின் கீழ் அடக்குமுறையாளர்களின் கீழ் இராணுவ ஆட்சிகளில் கூட ஆளும் வர்க்கத்துடன் மௌனமாய் உடன்பட்டவர்களாலோ தத்தம் வேலையைப் பார்த்தவண்ணம் கடந்து செல்பவர்களாலோ அன்றி தமது வரையரைகளுக்குள்ளும் தமக்கு நியாயமெனப் பட்டதை செய்பவர்களாலேயே மனித...
ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு...
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ...
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான்....
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது. உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாமியப் பெண்களின் இருப்பு யாரால் அல்லது எதனால் தீர்மானிக்கப் படுகிறது என்ற கேள்வி இதுவரை நீறுபூத்துக்...
“பள்ளிகொண்டபுரம்” நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த...
புத்தம் வீடு, எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில்...
வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும்...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை...
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று...
மரப்பசு 1975 இல் நூல் வடிவம் பெற்றது. இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தி. ஜானகிராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு “மரப்பசு”. அவரது பிற நாவல்கள்...