மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநாடும் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்தன. முக்கியமாக...
அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான்...
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம்...
என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே ‘மூத்த அகதி’ நாவலை எழுதி முடித்திருக்கிறேன்....
‘பாரதி’, ‘பெரியார்’ திரைப்படங்களை இயக்கிய ஞான ராஜாசேகரனின் ‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ‘மோகமுள்’ளின் கதை வாழ்க்கையில் பழமையானது. அது எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியத்துக்கு புதியது. முதிரா நாவலின் மையம். இந்த...
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன்...
இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு...
இந்தக்கதை 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு கான்சென்ட்ரேஷன் கேம்ப்களில் அடைபட்ட மனைவி, மூத்த மகள், மகன்களை விட்டுத் தப்பி ஓடி இந்தியாவின் பெங்களூரில் வந்து தஞ்சம் புகுந்த அப்பா மற்றும்...
அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால்...
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற...
தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக்...
கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க...
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த,...
தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து...
7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக்...
மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி,...
‘டு பாக் டு’…செத்துப் போய் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கடைசி வார்த்தைகள்… அது ஒரு தடயமா அல்லது குற்றச்சாட்டா அல்லது அர்த்தமற்ற குழப்பமா? இந்த மர்மத்தை விடுவிக்க ‘ஐபி’யின் ஜாயின்ட் டைரக்டர் சித்தார்த்தா ரானா...
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு...
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம்,...
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின்...
நாடக மேடை, பத்திரிகை, எழுத்து, சினிமா என்று எதை எடுத்தாலும் சும்மா ‘நச்’னு நகைச்சுவை முத்திரை பதிப்பதில் கிரேஸி கில்லாடி! மயிலாப்பூரில் உட்கார்ந்துகொண்டு தன் கேரக்டர் கிச்சாவை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். அவன் செய்யும் ரகளை...
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு...