அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான்...
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில்...
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில்...
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும்...
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம்...
‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே...
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற...
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில்...
என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே ‘மூத்த அகதி’ நாவலை எழுதி முடித்திருக்கிறேன்....
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க...
உலகில் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டு மிகவும் அதிகமாக வாசிக்கப்பட்ட மெயின் காம்ஃப் எந்த ஒருவனின் மரபுக்கொடையானது இன்றளவும் வரலாற்றை மேலெழும்பவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறதோ அந்த ஒருவனின் திகைப்பூட்டுவதும் உள்ளத்தை உறையவைப்பதுமான...
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...
இடது சாரி இயக்கங்களோடு தன் நாற்பது வருடங்களை கரைத்திருக்கும் பவா அதில் கண்டடைந்த தன் மேய்ப்பர்களாக பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, பேச்சாளர்களை, ஓவியர்களை, நாடகக்காரர்களை களப்பணியாளர்களை நம் முன் கட்டுரைகளுக்கும் மேலான...
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஜீவ நதியே போலப் பொங்கிப் பெருகிக்கொண்டிருக்கிறது மொஸார்ட்டின் இசை. இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் கடந்தாலும் அது அப்படியே இருக்கும். காலத்தின் மூச்சுக் காற்று முழுதையும் தனது இசையால்...
‘பாரதி’, ‘பெரியார்’ திரைப்படங்களை இயக்கிய ஞான ராஜாசேகரனின் ‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ‘மோகமுள்’ளின் கதை வாழ்க்கையில் பழமையானது. அது எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியத்துக்கு புதியது. முதிரா நாவலின் மையம். இந்த...
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன்...
இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு...
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும். சோழர் காலப்...
இந்தக்கதை 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு கான்சென்ட்ரேஷன் கேம்ப்களில் அடைபட்ட மனைவி, மூத்த மகள், மகன்களை விட்டுத் தப்பி ஓடி இந்தியாவின் பெங்களூரில் வந்து தஞ்சம் புகுந்த அப்பா மற்றும்...
சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது....
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.
உலகின் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட நூலாசிரியரிடம் இருந்து வெளிவந்த நூல். முழுவதும் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான வழிமுறை பற்றிய அசாதாரண ஆற்றல் மற்றும் விறுவிறுப்பான மர்மங்கள் நிறைந்த கதை இது. பிரச்சினையில் இருக்கும் மனிதர் ஜோனதன்...
மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள ‘ரசவாதி’ நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின்...