ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து...
ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது மேதைமையை, கலைநயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவில் புதிர் தெள்ளென அவிழ்ந்துவிடுவதில்லை. புரிந்ததைப் போலவும் இருக்கிறது, புரியாததைப் போலவும் இருக்கிறது. இந்தத்...
கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில்...
சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில்...
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இது தான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி...
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு...
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வபூர்வமாக நுணுக்கமாக மனதைத் தொடும் வகையில் மற்தொரு நாவல் வந்ததில்லை. – கிரீஷ் கார்னாட்,...
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட...
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ...
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ...
‘கிடை’ காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இங்கு இறுகிப் பிணைந்து கிடைக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன....
மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் ‘டாபிகல் கார்ட்டூன்’ ஆக அவரால் வரையவும் முடியும். பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று...
உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது. போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப்...
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத்...
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்....
உலகமயமாக்கலின் காரணமாக நவீன மனம் உணரும் அந்நியத்தன்மை, வாழ்க்கையில் தோற்றுப் போனதான உணர்வு, வெகு சாதாரணமானதொரு நிகழ்வு சட்டென்று அசாதாரணமானதாக மாறும் சூழல், நிகழ்காலமும் கடந்தகாலமும் ஒன்றோடொன்று முயங்கி மனிதர்களின் முன் கனவாக விரிந்திடும் மாயத்தோற்றங்கள்...
ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன....
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின்...
தீவிர அக்கறைகள்கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல். துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம்...
ஒரு பக்கம் போர். தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும். மனிதத்தையும் அமைதியையும் வளர்க்கவேண்டிய கிறிஸ்தவ பாதிரிகள் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும்இ எதைச் சிந்திக்கக்கூடாது என்பதை அன்றைய தேவாலயங்கள் தீர்மானித்தன....
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள், இவற்றிற்கு...
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல்...
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர்...