மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநாடும் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்தன. முக்கியமாக...
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. “பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…” என்ற அமர வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய பிரயத்தனம் இது. அதிரப்பள்ளி...
அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான்...
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில்...
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில்...
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும்...
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம்...
‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே...