படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை “காவியம்”. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது....
இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான, கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை...
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை...
“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள்; நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்த பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக...
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும்...
செறிவான ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கனவுகளின் உண்மை நிலை குறித்துப்பேசுவன இக்கவிதைகள் ஒருமிக்காத பிம்பங்களும், அவற்றின் விளைவுகளும் தொடர்ச்சியாக மற்றும் வித்தியாசமான சேர்க்கைகளில் தங்களை ஒன்றிணைத்து எழுச்சி வடிவங்களாக உருப்பெறுக்கின்றன நரனின் கித்தானில் (அல்லது) பிம்பவெளியில்...
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின்...
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா...
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல். படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே, அவற்றின்...
இருபத்தொராம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த காலகட்டம் சமூக, பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளையும் இத்தொகுப்பில் உலா கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன், நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது...
வெறும் இடங்கள், வெறும் ரயில் நிலையங்கள், வெறும் சிறிய பொருட்கள் மற்றும் கணங்கள்; ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை. ஆனால் அதைவிட இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை. – பா....
பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை...
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும்...
பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும்...
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள்...