போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும்...
தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி...
தரைக்கு வராத இலைகள் அந்தரத்தில் மிதக்கும்போது, அவை உதிர்ந்த கிளைகளும் அவை தொட இருக்கிற பூமிக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் என விரிகிறது இப்பெருந்தனிமை. இருபத்தோராம் நூற்றாண்டில், மனித மனம் அடையும் கலாச்சாரத் தனிமையும் மனித...
பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி...
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை...
விடுதலை நதியின் பிறப்புரிமை. தேங்கிய நீரில் அதன் இயல்பு நசுங்கிக் கிடக்கிறது. நீரலைகளே நதியின் ஜீவலீலைகள். நதியைப் போலத்தான் வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார் லாவோ ட்சு. ஓடும் நதி உன்னத வாழ்க்கைக்கு உவமை...
அன்பின் வழிமுறைகள் ஏன் இத்தனை பதட்டமுடையதாக இருக்க வேண்டும்? அதில் ஏன் துடைத்துத்தீராத கண்ணீர் துளிகள் துளிர்த்தவண்ணம் இருக்க வேண்டும்? காதலின் அனல்மூச்சுகளில் நம் இதயத்தின் பாறைகள் உருகும்போது பெருகும் வெள்ளத்தில் நாம் பற்றிக்கொள்ள...
முன்னாள் இந்நாள்என்றெல்லாம் இல்லைகாதல் எந்நாளுக்குமானதுஉனக்கும் எனக்குமானஇந்தக் கால இடைவெளிஊதினால் பறந்துவிடும் தூசிப்படலம்.என்றைக்கானாலும் சரிநீ வந்து முன் நின்றால்என் ஆணிவேர் அசையும்ஏற்றிவைக்க மட்டுமே வழியுள்ளகாதலின் பீடத்தில்நீயே ராணி.
கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும்...
“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்....