பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை...
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும்...
பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும்...
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள்...
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ...
ஹான்ஷான் என்றால் குளிர்ந்த மலை எனப் பொருள்படும். சீனாவின் தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எனும் ஜென் துறவி, தாவோயிய மற்றும் சான் மரபையொட்டி எழுதிய கவிதைகளில் இருந்து நூறு கவிதைகள் இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன....
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது,...
ஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும்,...
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற...
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்....