தற்கால நிலைமையில் தங்களது புத்தகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. வேலைகளை உருவாக்குவது மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த கடுமையான காலகட்டத்திலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும். – டாக்டர் பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும்...
பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார...
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன்...
நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கௌரவன்’ துரியோதனன். இந்த இரண்டாம் பாகத்தில் –...
பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், சீனம் ஜப்பான், திபெத், கொரியன், சிங்களம், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. எனவே, பௌத்த...
ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி. கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான்...
புகழ் பெற்ற ஒரு நூலாசிரியர், போர்முனைச் செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு பத்திரிகையாளராக வேலை பார்த்து வரும் தன்னுடைய மனைவி திடீரென்று ஒரு நாள் எந்தச் சுவடுமின்றித் தன்னுடைய வாழ்க்கையிலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்....
இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டி வரப்பட்ட பரம்பரைகளின் வழித்தோன்றல்களாக இன்றும் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பிறந்து, அங்கேயே உடல் தேய வேலை செய்து, மரித்து, அதே பயிர்களுக்கு உரமாகிப் போகும் ஏழைக் கூலித்...
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான...
இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல. இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும்...
சாதிய விஷம் நீர்த்துப்போகாது இன்னும் பரவலாகத் துளிர்விட்டபடியே இருக்கிறது. அந்த அடக்குமுறை ஒருபுறம் என்றால், பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னும் பல அடுக்குகள் கொண்டவை. அப்படியான துயர்தோய்ந்த காலத்தில் பாறைப் பிளவுகளில் தன் வேர்...
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல...
உறவுகள், தொழில், சொத்து, உடல்நலம் என பலவகையான தேவைகளுக்காக நாம் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும்போதும், பல நேரங்களில் நாம் வெறுமையையும், நமது உண்மையான சுயத்திலிருந்து விலகிவிட்ட உணர்வையும் அடைகிறோம். ஒரு கிரகம், பல சூரியன்களை...
போலி கவிசாகசப் பாவனைகள் தவிர்த்து, வாழ்வனுபவங்களின் அதன் மீச்சிறு தருணங்களின் மீதான அவதானிப்புகள் வழியே எளிமையாகப் பிறக்கும் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. கவிதைகளின் காட்சிகளில் குரல்களில் பொருண்மைகளில் தொனிக்கும் உணர்ச்சி மிகுதி அதன் பலமும்...
அலைந்து திரியும் ஒருவன் தற்செயலாய் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றான். அவளின் மர்மம் நிறைந்த பின்புலம் அறியாமலே அவளோடு தென்கிழக்காசியா சுற்றித் திரியத் தீர்மானிக்கின்றான். இப் பயணத்தின் தூண்டலால் அவனுக்குள் கட ந்த கால நினைவுச்...
“நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான். கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த...
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக்...
அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள்...
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவிற்குப் பின் தொகுக்கப்பட்டது. 1905இல் திருமதி. ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்....
ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது, தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து...
புத்தாயிரத்தில் ஆரம்பித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறைமீது அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், கலாச்சாரம், பொருளாதாரம் எனப் பல்வேறு வகையில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற...
உங்கள் மனத்தின் அதிசய சக்தியைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான கையேடு! கடந்த 70 ஆண்டுகளில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுள்ள நூல்! கிளாடு எம். பிரிஸ்டல் எண்ணங்களின் இயல்பு மற்றும் ஆழ்மனத்தின் ஆற்றல் குறித்துச் சொந்தமாக ஏராளமான...
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை,...
இருத்தலை ஊதி இடம் நகர்த்தும் காற்றின் பாதை மெல்ல நகர்கின்றது அந்தரமான வாழ்வின் இரேகைகள் அடங்கிய இரகசியங்கள் அறிப்படாமலும் புரியப்படாமலும் தரை மோதியே அழிகின்றன காற்றை விழுங்கிய வளிக்குமிழிக்குள் எவ்வளவு காற்று மூச்சுத் திணறியிருக்கும்...
ராணுவம் தனியார்மயமாக்கப்படுவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தனியார்மயமாக்கப்படுவது ஆகியவை இன்று சர்வசாதாரணமாகிவிட்டன. இவை எங்கிருந்து தொடங்கின என்று தேடுபவர்களுக்கு ஒரு டைரி போல இக்கட்டுரைகள் உதவக் கூடும். தவிர ஒரு மர்ம நாவல் போன்ற சுவாரஸ்யத்தை...