‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே...
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...
“எனது ரசிகர்கள்மற்றும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருமே இந்த நூலை வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமானதாகவும் வாழ்க்கையை உயர்த்தக்கூடிய அளவில் மிக்க பயனளிப்பதாகவும் கருதுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” – ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் மிக்க தனித்துவம் வாய்ந்த,...
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற...
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு...
ஆங்கில, அமெரிக்க, பிரெஞ்சு, ருஷ்ய, சீன, ஜப்பானிய, கிரேக்க, இந்தியக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் நுண் உணர்வு மிக்க சிறப்பான தமிழாக்கம் இந்நூல். படித்து ரசித்தபோது கிளர்ச்சியூட்டியவையும் மொழிபெயர்க்க உகந்தவையுமான கவிதைகள் மட்டுமே, அவற்றின்...
வெறும் இடங்கள், வெறும் ரயில் நிலையங்கள், வெறும் சிறிய பொருட்கள் மற்றும் கணங்கள்; ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை. ஆனால் அதைவிட இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை. – பா....
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும். சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே...
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி...
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது....
பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை...
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை. ஆனால் அதே சமயம் நாம்...
இலங்கையைக் கடவுள் படைத்தார். இந்தச் சிறையை பிரிட்டிஷ்காரர்கள் படைத்தார்கள். இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே அதிக வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் பெண் நான்தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முந்நூற்று இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும். சுக்கிராச்சாரியாரின்...
ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து...
சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவராய் ஜெர்மனி வந்த என் அப்பாவின் வரலாற்றுப் பயணத்தில், தமிழர்களுக்கான மிக முக்கிய அறிவியல் எழுத்தாளரான மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் உருவாகிய காலத்திலிருந்து அவர்கூடவே நானும் பயணித்திருக்கிறேன். அவரின்...
உலகின் மிக முன்னேறிய அமைதி யான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல்...
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ‘மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத்...
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும்...
ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது மேதைமையை, கலைநயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவில் புதிர் தெள்ளென அவிழ்ந்துவிடுவதில்லை. புரிந்ததைப் போலவும் இருக்கிறது, புரியாததைப் போலவும் இருக்கிறது. இந்தத்...
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இது தான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி...
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட...