கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும்...
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் – யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே...
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும்...
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்…. நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல்,...
நான் என் கிளையோடும், இலையோடும், நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்.
உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன்...