ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை கருத்துரை ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. “96” திரைப்பத்தின்...
நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக் கதைகளை உருவாக்க முடியும். – முன்னுரையில் இயக்குனர் ஜி. வசந்தபாலன்
தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பனையை ஒருவர் எத்தனை தூரத்துக்குப் பெருக்கலாம் என்னும் பெருவியப்பே ஏற்பட்டது. பிரமிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. ஓர் அத்தியாயத்தைப் படிக்கும்போது அதில் சொல்லப்படும் ஒரு...
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள்...
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இது தான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி...
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர்...
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை...
நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம்....