இப்புத்தகம் மருத்துவம் மற்றும் மனித நடத்தையியல் தொடர்பான பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ளன பல விசயங்களை நடைமுறைப் படுத்தமுடியும் என்பதை அறிந்து கொள்வதோடு அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்று ஆசிரியர்...
‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான...
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல....
இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும்...
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச்...
அரசாங்கங்கள் தனது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை நமக்காக அதிகாரங்களை தக்க வைத்த நாட்டில் தான் வாழ்ந்த எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற...
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென...
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின்...
இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது....
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக...
புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களை பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு...