பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை...
வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த புத்தகம்…. மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு...
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள்...
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ...
தீவிர அக்கறைகள்கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல். துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம்...
சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால்...
‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று.’ – ஜெயமோகன் தமிழின் அபூர்வமானதொரு...
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன்....
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது...
மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல்...
தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல்...
சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறாள்; அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள், செல்வத்தை திரட்டுகிறாள்....
மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய...
இன்றைய நவீன யுகத்தின் ஆண் – பெண் உறவுச் சிக்கல்களை அவற்றின் அபத்தங்களை பாசாங்குகளை அதன் விளைவான அறம் மீறிய சமரசங்களை அதற்குப் பின்னான உளவியலின் அரசியலை இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் பேசுகொருளாகக் கொண்டிருக்கின்றன....
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்....
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர்...