1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் “ஒரு புளிய மரத்தின் கதை” ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை...
பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்கள்தாம் பொருளாதார அடியாட்கள்....
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென...
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல்,...
அன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின்...
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமித்திரனின்...
இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன...
இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது....
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக...