காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல்...
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது....
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம்,...
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து...
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்...
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி...
இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன....
கூளமாதாரி, பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரிக்கிறது. பதின்பருவத்தின் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு...
காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு...