கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான...
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் – யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே...
வாழ்வில் சற்று நிதானித்து உங்களுடைய தினசரிப் பழக்கங்களையும் கண்ணோட்டங்களையும் மாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளுங்கள் புகழ்பெற்ற ஜென் புத்த மதத் துறவியான ஷுன்மியோ மசுனோ, பல நூற்றாண்டுகால ஜென் தத்துவங்களை அலசி ஆய்வு...
ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம்...
வெறும் இடங்கள், வெறும் ரயில் நிலையங்கள், வெறும் சிறிய பொருட்கள் மற்றும் கணங்கள்; ஞாபகங்களை மொழியில் நெய்வது தவிர நீ செய்வது ஒன்றுமில்லை. ஆனால் அதைவிட இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரிப்பதும் வேறில்லை. – பா....
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும். சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான். இதற்கு அஞ்சியே...
இலங்கையில் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமல்ராஜ் பிரான்சிஸ், தற்போது சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றில், ஆசியப் பிராந்தியத்திற்கான பொருளாதாரப் பாதுகாப்பு இணைப்பாளராகத் தாய்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். லெபனானில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய அமல்ராஜ், தான் பார்த்த,...
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி...
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன. புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில்...
21’ம் விளிம்பு கட்டுரைத் தொடர் நான் குமுதம் பத்திரிகையில் ஆசிரியராக கொஞ்சகாலம் 1994/95ல் இருந்தபோது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சில அறிவியல் கட்டுரைகளும் சில இலக்கிய, சில மொழிபெயர்ப்பு பொதுக் கட்டுரைகளும் கொண்ட...
தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து...