இலங்கையைக் கடவுள் படைத்தார். இந்தச் சிறையை பிரிட்டிஷ்காரர்கள் படைத்தார்கள். இதுவரையான இலங்கை வரலாற்றிலேயே அதிக வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் பெண் நான்தான். விடுதலையாகி வெளியே வரும்போது எனக்கு முந்நூற்று இருபத்தியிரண்டு வயதாகியிருக்கும். சுக்கிராச்சாரியாரின்...
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்.அது ஏன்...
கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் – வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு...
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை. ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும்...
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத்...
எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக...
சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவராய் ஜெர்மனி வந்த என் அப்பாவின் வரலாற்றுப் பயணத்தில், தமிழர்களுக்கான மிக முக்கிய அறிவியல் எழுத்தாளரான மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் உருவாகிய காலத்திலிருந்து அவர்கூடவே நானும் பயணித்திருக்கிறேன். அவரின்...
வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற...
தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். இன்றைய மனிதவாழ்வில் எச்சங்களாகி நிற்கும்...
பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
உலகின் மிக முன்னேறிய அமைதி யான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு இன்றைய காலகட்டத்தில் எத்தகைய அடையாள சிக்கல்களும் இருத்தலியல் ஐயங்களும் அலைக்கழிக்கின்றன என்பதைச் சொல்லும் நாவல்...
ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது...