ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை என்று நினைக்கிறேன். இது புகழ் நூல் அல்ல. விமரிசன நூலும் அல்ல. மதிப்புரை கருத்துரை ஆய்வுரை வகையறாவா என்றால் இல்லை. “96” திரைப்பத்தின்...
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்து பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச்...
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம்....
அல்காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, IS என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக...
மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி,...
ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில்...
நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக் கதைகளை உருவாக்க முடியும். – முன்னுரையில் இயக்குனர் ஜி. வசந்தபாலன்
‘டு பாக் டு’…செத்துப் போய் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் கடைசி வார்த்தைகள்… அது ஒரு தடயமா அல்லது குற்றச்சாட்டா அல்லது அர்த்தமற்ற குழப்பமா? இந்த மர்மத்தை விடுவிக்க ‘ஐபி’யின் ஜாயின்ட் டைரக்டர் சித்தார்த்தா ரானா...
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா...
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு...
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம்,...
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின்...
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது....
நாடக மேடை, பத்திரிகை, எழுத்து, சினிமா என்று எதை எடுத்தாலும் சும்மா ‘நச்’னு நகைச்சுவை முத்திரை பதிப்பதில் கிரேஸி கில்லாடி! மயிலாப்பூரில் உட்கார்ந்துகொண்டு தன் கேரக்டர் கிச்சாவை அமெரிக்காவுக்கு அனுப்புகிறார். அவன் செய்யும் ரகளை...
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு...
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப்...
ஆதாரபூர்வமான தகவல்கள். மிரட்டலான மொழிநடை. நெஞ்சு நடுங்க வைக்கும் நிஜம். ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர், அல் காயிதா என்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது...
“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமானது ‘அன்பே ஆரமுதே’. வெகுஜன இதழில் தொடராக வெளிவந்த்தனால்...
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார்...
நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்....
விஜய் அண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சைத்தான்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. ‘ஆ..! 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென் பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய...
ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை’யாக விரிகின்றன. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகள் பலவும் இணைந்து ரகுநாதனின் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன. ரகுநாதனின் வாழ்வின்...