உலகத்திலேயே அதிகம் சுலபமற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும்தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. இன்னும் எனக்கு அற்புதமாகப்படுவது ஒரு பறவை தன் சிறகை விரிப்பதும், பறத்தல் முடிந்து கிளையமர்கையில் தன்...
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது...
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்புவது என்னவெனி் மகுதாகவாவின் படைப்புகளிலிருந்து நான் நிறையக் கற்றுக்...
சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள்...
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில்...
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான...
மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச்...
எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும் கூர்மையும் குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது...
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின்...
மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்றுத் தகவல்கள், அரசியல் தகவல்களை இந்நூல்...
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது,...
சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு. – பீப்பிள் மேகஸின் இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச்...
சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர்,...
தன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல்...
3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல். வரலாறு படைக்கப்போகும் தமிழாற்றுப்படை, தமிழுக்கான கொடை, தமிழறிஞர்களுக்கான வணக்கம், தமிழுக்கான மகுடம்.
‘அழகி’, ‘தென்றல்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. மனிதனின் அக வேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளை சமன் செய்வதே வாழ்வின் சவால். 70களில்...
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் புகழ்பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும்...
ஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும்,...
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர்,...
இந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள்...
அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி...
யாரும் வேண்டாம், எதுவும் தேவையில்லை என்று சொல்லி உலகை நிராகரித்த துறவின் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும்...
வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் தக்கர்கள். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்த இந்தப் பெரும் கொலைகாரக்கூட்டம் இன்று தடமே இல்லாமல் மறைந்துபோய்விட்டது. வலுவாகக் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின்...
சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய்விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயக்கிக்கொண்டிருக்கும்...
இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள...
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த...
‘ஒரு ஊரில்…’ என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு...
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனிமனித உணர்வுகளும் நிரம்பியிருந்த முதல் பருவக் கவிதைகளிலிருந்து (நடுநிசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை ‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பில் இடம்பெற்ற...
நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால்...