சர்வதேச உறவுகள் பற்றிய ஒரு செவ்வியல் ஆராய்ச்சி நூலான இது, போர்ச் சூழலை உருவாக்குகிற உலக அரசியலை இயக்கும் சக்திகளைப் பற்றிய ஒரு தொலைநோக்குள்ள, வலிமைவாய்ந்த பகுப்பாய்வு. *** உலகின் மிகவும் செல்வாக்குள்ள சிந்தனையாளரான...
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி...
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட...
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை....
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று...
தமது வாழ்நாளில் பத்தாயிரம் தினங்களுக்கு மேல் சிறையில் கழித்த இந்த நூற்றாண்டின் மாபெரும் மானுடப் போராளியின் வாழ்க்கை. மனிதனுமல்லாத விலங்குமல்லாத ஒரு நிலையில் தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஓர் உயிரி...
இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும்...
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்’ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின்...
பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய- அமெரிக்கரான காலித் ஹூசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல். காபூலின்...
சகர்வான், தன்னை யானையைக் கட்டி மேய்த்த பணிக்கரின் பேத்தி என்று சொல்லிக் கொள்கிறாள்; அது பொய்யோ புனைவோ அல்ல. தன்னை உதாசீனம் செய்த கணவனை உதறிவிட்டு தன் உழைப்பின்மூலம் குடும்பத்தைப் பேணுகிறாள், செல்வத்தை திரட்டுகிறாள்....
18வது அட்சக்கோடு ஒருவரலாற்று நாவல் – சுதந்திரத்துக்குப் பிறகான நிஜாம் அரசாங்கத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை எளிய இளைஞனைச் சுற்றியதான நிகழ்வுகளின் கோர்வைகளாகப் பதிவு செய்கிறது. தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கிப் பார்க்கும் ஒரு...
பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர்...
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் “பனி”. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் “பனி”. மதச் சார்புக்கும்...
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமா வின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை,...
இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ அரசனின் கனவு அவரின்...
மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய...
சமகால இந்திய எழுத்தாளர்களில் மிகச் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவர்’ – ஃபோர்ப்ஸ் இந்தியா ‘சலீம், தன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்காக விரிவான உலகைப் படைப்பவர்… பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல் தன் எழுத்தெனும் நுண்ணிய இழைகளால்...
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத...
நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம்....
“பெண் டிரைவர்” என்ற இந்தப் புத்தகம் மிகவும் ஏழை, விளிம்புநிலையில் வாழும் பெண்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அல்லது ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள டிரைவர் என்கிற தொழிலை முன்னெடுத்து எப்படி வெற்றி கண்டார்கள் என்பதைச்...
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான (Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று...
சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும்...
தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே. அராத்துவின்...
நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு...
வாழ்வனுபங்களால் விளைந்த மனக் குறிப்புகளை கட்டுரைகளாக்கியுள்ள இந்நூல். உலகின் பல்வேறு அறிஞர்களையும், புகழ் பெற்ற புத்தகங்களையும், காண்பதற்கு அரிய திரைப்படங்களையும் அறிமுகம் செய்து வைக்கிறது. வளரும் தலைமுறையினருக்கு நல்வழிகாட்டி இந்நூல்.
காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளாக மிகச் சிலருடையவையே இருக்கின்றன. கல்கியின் எழுத்துகளை அந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் போற்றலாம். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தைவைகளைச் சுற்றித் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விட்டு,...
எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும். ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான...
போரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும்...