இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே...
ராபின் ஷர்மா இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர்,...
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுனூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை,...
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும்...
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி...
புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களை பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு...
என்னையே பாருங்க, காலைல பத்து மணி வரைக்கும் தூங்க முடியுது. மெல்ல நாஷ்தா பண்ணிட்டு மெல்ல குளிச்சுட்டு மார்னிங் ஷோ, நூன் ஷோ பார்த்துவிட்டு சாப்ட்டுட்டு என்ன ரிலாக்ஸா இருக்க முடியுதுங்க. என்ன கொஞ்சம்...
கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார்....
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன....
‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள்...
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் “கரைந்த நிழல்கள்”நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி பகுதியாகவும்இ நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு...
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மராத்திய இலக்கியத்தில் சிறப்பான ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு காவியப் படைப்பு இது.“என்ன, மீண்டும் மகாபாரதக் கதையா?” என்று நீங்கள் மலைக்க வேண்டாம். நம்மில் பெரும்பாலானோர் அறிந்து வைத்துள்ள...
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை...
புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம்....
2001 இன் பின்னான நிகழ்வுகளின் காலக்களத்தைக் கொண்டிருப்பதாலேயே “கனவுச் சிறை”யின் தொடர்ச்சியாக இந் நாவலைக் கொண்டுவிடக் கூடாது. “கனவுச் சிறை”கனவுகளற்ற இலங்கைத் தமிழ் மக்களின் போர்க் கால அவலங்களைச் சொல்லியது. அரசியல் பின்னணியிலிருந்து நாவலின்...
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே...
“கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள்...
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டி கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் “கழிமுகம்” பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச்...
• ஆனந்த விகடன் விருது – 2020 சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் பத்து வெவ்வேறு நாட்டு கவிஞர்களின் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய சிறுகுறிப்புடன். வழக்கமான அனுராதாவின் புத்தகம். மேலும் நம்மை சுழலுக்குள் இழுக்கும் கவிஞர்கள். வெவ்வேறு...
நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின்...
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும்...
எங்கும், எப்போதும் பிசினஸ் உலகின் எதிர்பார்ப்பு ஒன்றுதான். இது வேண்டாம் என்றோ இப்போது வேண்டாம் என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் நான் விற்கும் எதுவொன்றையும் கஸ்டமர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ளுமாறு செய்வது சாத்தியமா? சாத்தியம் என்கிறார்...
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது. முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்,...