காக்கா கொத்திய காயம், ஆழமான நுண்ணுணர்வுகளைத் தொடும் புனைவு வீச்சுடனும், படைப்பாற்றலுடனும் வெளிப்படுத்தப்பட்ட பதிவுகளைக் கொண்ட நூல். ஈழத்து மக்களின் யுத்தகால வாழ்க்கையை, அதற்குள் பிறந்து வளர்ந்து அனுபவித்த ஒருவரின் பார்வையில் புரிந்துகொள்ள உங்களை...
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை...
அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம்...
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக...
காதலுக்கு காலம் இருக்க முடியுமா? மனதின் மதகுகளைத் திறந்து விடக்கூடிய கேள்வி! அழிந்து போன மம்மோத் யானை போல் எல்லாரின் மனங்களுக்குள்ளும் ஒரு காதல் பதனிடப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏன் அது அழிந்தது, ஏன்...
காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம்...
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் “காதுகள்” என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன்...
சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும்...
உலகம் கார்ல் மார்க்சின் 2000ஆம் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த பின்னணியில் எழுதப்பட்டது இது. மார்க்ஸ் தன் கால உலகை விளக்கியவர் மட்டுமல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய அவசியங்களையும் முன்வைத்தவர். 2013 இல்...
நம்மைச் சார்ந்தவர்களின், நம்மை விட்டுப் பிரிந்தவர்களின் ஞாபகம் ஏதோவொரு பழைய பாடலில் நிச்சயம் புதைந்திருக்கும். பல ஞாபகங்கள் கொண்ட பழைய பாடல்கள் அனைத்துமே பாதுகாக்கப்படவேண்டிய ஞாபகப் பேழை. அந்தப் பேழையிலிருந்து நூறு பாடல்களை இந்தப்...
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த, ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘A Brief History of Time’ நூல், ஓர் அற்புதமான அறிவியல் படைப்பாகும். ஹாக்கிங்கின் வசீகரமான எழுத்து நடையும், காலம் மற்றும்...
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத்...
அலாஸ்காவின் எல்லைப்பகுதியான பனிப்பிரதேசங்களில் தங்கம் கிடைப்பதாகக் கருதி மக்கள் தேடி அலைந்த ஒரு காலகட்டத்தில் நடக்கிற கதை. அதைவிடவும் அந்தப்பகுதிக்கு சென்ற மனிதர்களுக்கு உணவளிக்கவும், தபால்கள் தரவும் பயன்படுத்தப்பட்ட நாய்கள் பற்றிய மிக நுணுக்கமாய்...
21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் நூல்! பில் பிரைசன் தன்னைத் தயக்கத்துடன்கூடிய ஓர் ஊர்சுற்றி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் தன் வீட்டில் அடைந்து கிடக்கும்போதுகூட, தன்னைச் சுற்றி இருக்கின்ற உலகைக்...
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி...
காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல்...
ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது....
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம்,...
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து...
முப்பது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது இலங்கை. யுத்தம் முடிந்து இப்போது பதின்மூன்று வருடங்களாகின்றன. ஆனால் யுத்தகாலத்தில் கூட ஏற்படாத பொருளாதாரப் பேரவலத்தை இலங்கை சந்தித்து வருகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள்...
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை! இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி...
இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன....
கூளமாதாரி, பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரிக்கிறது. பதின்பருவத்தின் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு...
காடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைகள் கிடைக்கின்றன. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு...
நாம் தற்போது பயன்படுத்தும் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிப் பொருள் கொடுக்கும் ‘கார்ட்டூன்’ சொல் பயன்பாட்டை பிரிட்டிஷ் பத்திரிகை ‘பஞ்ச்’ தொடங்கியது என்று சொல்கிறார்கள். 1843இல் பார்லிமெண்ட் கட்டிடம் தீக்கிரையானபோது அதன் புனரமைப்பின் தருணத்தில் பிரிட்டிஷ்...