எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு திரை விழுகிறது. இது...
பிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும். – சாரு நிவேதிதா
ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்றம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன. – எஸ். சண்முகம்
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது?...
பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும்...
நம்மை நாமே அணைத்துக் கொள்ளும் நிலை சூழல் எல்லோருக்கும் வரும். அச்சூழல்களில் எல்லாம் நம்மை நாமே அணைத்துக் கொள்ள உதவும் ஆயிரம் வழிகளில் ரிஸ்காவின் கவிதைகளும் அடங்கும்.மேலும் இத்தொகுப்பின் கவிதைகள் பல கைநீட்டி கண்ணீர்...