ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு...
வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ...
தமிழில்தான் எத்தனை அறநூல்கள்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும், சிலது ‘இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே’ என்று குற்றவுணர்ச்சியைத் தரும், ‘இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?’ என்று...
இயற்கை வழி பேரழிவுகள் அசாதாரணமானவை. அவற்றை உணர்ந்தறியும் திறன் சிறு பிராணிகளுக்கும், பறவைகளுக்குமே உண்டு. மனிதருக்கில்லை, இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தமிழ் கிராமமான தென்னமரவாடியில், 1984ஆம் ஆண்டு...
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை...
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த...
அன்பே மானுட வாழ்வின் அர்த்தமெனச் சொன்ன ததாகதரின் சீடர்கள் வெறுப்பையும் துவேஷத்தையும் தங்கள் அடையாளமாக வரித்துக்கொண்ட காலகட்டத்தில் பிறந்தவள் நான். குடும்பத்தின் அச்சு துவேஷத்தின் தீச்சுவாலைகளுக்குப் பலியாகி விட்டது. அதன் விளைவாக வெறுப்பின் விஷநாவுகளில்...
இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் பெண்கள் அத்தனை பேரும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அடிகளையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் வாழ்வில் சந்தித்தவர்கள். ஆனால் அவை எதுவும் இவர்களுடைய வெற்றியை பாதிக்கவில்லை. நிகரற்ற, மிகப்பெரிய வெற்றி! பெண்களால்...
நுண்கதை, சிறுகதை, குறுநாவல் என நூறு சொற்கள் முதல் பத்தாயிரம் சொற்கள் கடந்த கதைகளின் தொகுதி இது. வரலாற்றுப் புனைவு, விஞ்ஞானப் புனைவு என இரு எதிரெதிர் துருவங்களும் இதிலுண்டு. ஆனால் வேறுபாடின்றி இரண்டு...
மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ...
கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும்...
தமிழ் தொன்மையான செவ்வியல் மொழி. அதே நேரம், பயன்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட மொழி. இந்த இரண்டும் ஒன்றாக அமையப் பெற்ற மிகச் சில உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உயர்நிலையைப் பெற்றுத் திகழ்கிறது. அதனால்,...