அதிகாரம் தனிமனிதர்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அதன் அபத்தத்தையும் மிகுந்த எள்ளலுடன் முன்வைக்கிறது ராஸ லீலா. மானுடத் துயரம் கேளிக்கையாக மாற முடியும் என்பதை இந்தப் பின்நவீனத்துவ நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால்...
இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. ஓர் உணவுத் தீவிரவாதியாக இருந்து, ஒரு நாளில் ஐந்து வேளைகள் உண்டுகொண்டிருந்தவன், ஒருவேளை உணவிருந்தால் வாழ்ந்துவிட முடியும் என்று தேர்ந்து தெளிந்த வரலாறு ஓர்...
இரத்தினக் கற்கள் நிறைந்த எழில் மிகு இலங்கைத் தீவில் காலத்துக்குக் காலம் விதவிதமான மக்கள் வந்து குடியேறிக் கொண்டே இருந்தார்கள். சிலர் ஆட்சியமைத்து உரிமை கொண்டாடினார்கள். சிலர் குடும்பம் அமைத்துக் குலம் வளர்த்தார்கள். இன்னும்...
எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற...
“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக்...
சர்வாதிகாரம். பஞ்சம். பட்டினிச் சாவு. மிரட்டல். கடத்தல். அரசியல் கொலைகள். அணு ஆயுதங்கள். ஏவுகணைகள். பேரழிவு. இவற்றைத் தவிர வட கொரியாவில் ஒன்றுமில்லை. வதந்திகள், ஊகங்கள், கிசுகிசுக்களை முற்றிலும் விலக்கி, வட கொரியாவின் அத்தனைக்...
வாழ்க்கையின் நுட்பமான, சிக்கலான நிலைகளின் ஆழத்திற்கு இறங்கி பிரகாசமான பகுத்தறிவு, தாத்வீகம், மானுட அம்சங்களையும் உணர்திரனையும் பரிசோதிக்கும் புனைவு ‘வம்சவிருட்சம்’. இதுவரை கன்னடத்தில் முப்பது பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம் முதற்கொண்டு இந்தி, மராத்தி, குரஜராத்தி,...
சாரு நிவேதிதா எழுதும் கட்டுரைகள் அ-புனைவுகள் அல்ல. அவையும் ஒருவித ‘புனைவுகளே’. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக சாரு கவனமாக உருவாக்கியுள்ள ஒரு புனைவுருவமே சாரு நிவேதிதா. சாருவின் அ-புனைவை ரசிக்கிறவர்கள் தம்மையறியாது அவரது புனைவுகளையும்தாம் ரசிக்கிறார்கள்....
Startups எனப்படும் தொடக்கநிலை நிறுவனங்கள் அளவில் சிறியவை. அவற்றைத் தொடங்கி நடத்தும் மனிதர்களும் மிக எளியவர்கள்தான். ஆனால், கனவில், உழைப்பில், ஊக்கத்தில் பெருநிறுவனங்களால்கூட அவர்களுக்குப் பக்கத்தில் நிற்கமுடியாது. நாளைய உலகம் எங்கு செல்லும், எங்கு...
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு...
சரித்திரம் என்பது எழுதுவதல்ல, நிகழ்வது. நிகழ்ந்த சரித்திரங்கள் அத்தனையும் எழுதப்படவில்லையென்பதே மண்ணிற்குள் கரைந்தூறியிருக்கும் குருதியின் மௌமான ரௌத்திர தீயொலியாகும். வடார்க்காட்டு மண்ணில் விழும் வெயிலே அடிமை மக்களின் கந்தகக் கோபங்களுக்கு சாட்சி. இந்த மண்ணில்...