இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகளாக இருப்பதால் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டவை. அவ்வாறே இந்த சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் மூவருமே தமது பிறந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அந்த வலிமை மிக்க...
‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ என்பது தமிழ் சிறுகதை உலகின் நூறு ஆண்டு கால வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு மாபெரும் தொகுப்பாகும். வீ. அரசு அவர்களின் நேர்த்தியான பதிப்பில் சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள இந்நூல்,...
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது...
சர்வதேச இலக்கிய விருதுகளான நோபல் பரிசு, நோமா விருது, ஆலிவ் ஷ்ரைனர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற எழுத்தாளர்களின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறுகதைகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுகதைகள் விவாக...
நீடித்து நிலைக்கும் வெற்றிக்கான இரகசியங்களை கண்டறிந்த பிரபலமான துறவி ஜூலியன் மேண்டலை எதேச்சையாக சந்திக்கிறார் டார். ஜூலியன் டாரின் உண்மையான சுயரூபத்தை அறியவும், வாழ்க்கையின் கனவுகள் மெய்ப்படவும் ஒரு அசாதரண பயணப் பாதையில் இட்டுச்செல்கிறார்.
ஆண், பெண்ணின் மேல் ஆதிக்கம் செலுத்துவது தவறே இல்லை என்பதற்கு சாட்சியாக இன்றைக்கும் பல தொலைக்காட்சி சீரியல்கள், திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆணாதிக்கக் கருத்தாக்கம் திரும்பத் திரும்ப எல்லோர் மனத்திலும் காட்சிகளாக, பாத்திரங்களாக அழுத்தமாக...
நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.
‘உலக சினிமா’ நூல் சிறந்த உலகத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் நூல் மட்டுமல்ல; ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், அதன் கலைநுட்பத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளை எப்படிக்...
அகரமுதல்வனின் எழுத்துக்கள் சபிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் குமுறல்கள். ஆத்திரங்கள். நீதியும் அறமும் பேசும் உலகை நோக்கி எள்ளலுடன் உமிழும் எச்சில் துளிகள். சராசரி இளைஞனுக்குரிய இயல்பான வாழ்வு மறுக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் போரின் மூர்க்கக்...