உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத்...
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. – தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக...
அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின்...
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக...
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று.