நம் அன்றாட வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகத்தில் உச்சரிக்கும் ஒற்றை எழுத்துக்களோடு தொடர்புடைய எட்டு கதைகளை இத்தொகுப்பில் அற்புதமாகத் தந்திருக்கிறார் மலர்வண்ணன். எல்லா சிறுகதைகளும் எடுத்த எடுப்பில் ஒரே நேரத்தில் படிக்கக் கூடிய சுவாரஸ்யத்தைத் தூண்டுகின்றன....
அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின்...
பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும்...
தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய...
ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் நீர் ஊற்றி தனியாய் உண்ண வாய்த்த ஒருத்தியின் ஊரடங்குத் தனிமைக்கு குக்கரின் மூன்று விசில் துணை இருக்கிறது. நான்காம் ஊரடங்கின் முடிவில் பேராளுமை பாரதி மணி பாட்டையா...
வாழ்வின் இலக்கை அடைவதற்கு முதல் படி நம்மைப் பற்றி நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்கொள்வதுதான். வாழ்வில் வெற்றி அடைபவா்களுக்கும் தோல்வி அடைபவா்களுக்கும் இதுதான் மிகப் பெரிய வித்தியாசம். மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தங்கள் வாழ்வை...
காதலைச் சொன்னதற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்கள் முற்றிலும் வேறானவை. சொல்வதற்கு முன், அங்கோர் இனிய விளையாட்டு இருக்கும். ‘நான் உன்னைக் கவர வருகிறேன், நீ என்னிலிருந்து முடிந்தால் தப்பித்து ஓடு’ என்பதான கண்ணாமூச்சி. ‘உன்னை...
வெவ்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய மாயா கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் ஒரு பறவையைப் போல கடந்த காலத்திற்குள் சென்றமர்ந்து மீள்கிறேன். காதலும், கண்ணீரும், ஏக்கமும், கொண்டாட்டமும், பதற்றமும், நிராகரிப்புகளும் சில்வண்டுகளைப் போல ரீங்காரமிட்டுச் செல்கின்றன....
இந்நூலில் இடம்பெற்றிருப்பவை திருக்குறள் காமத்துப்பாலின் நேரடிப் பொருள் விளக்கம் அல்ல. திருக்குறளை ஊன்றி வாசித்ததன் விளைவாக அய்யன் வள்ளுவனுக்கும் எனக்கும் இடையே உண்டான ஒரு அரூபத் தொடர்பில் எனக்கொரு சித்திரம் கிடைக்கிறது, காமத்துப்பாலில் உள்ள...
பல்வேறு படங்கள் சார்ந்து, கருப்பொருள் சார்ந்து வருணன் எழுதி இருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது, எல்லாமுமே சினிமாவை திறனாய்வு செய்யும் விதமாகவே இருக்கிறது. கட்டுரைகள் பல கருப்பொருள் சார்ந்து இருந்தாலும் அவை இணையும்...
கவிதைகள் வழியாக வாழ்வியலின் எதார்த்தத்தைச் சொல்கிறது.காதலைத் தாண்டிய பரந்த மனித மனத்தின் வெளிப்பாடுகளைப் பேசுகிறது.இயற்கை விதியான முதிர்வு மற்றும் பிரிவை தத்துவார்த்தமாக அணுகுகிறது.