மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும்...
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
எங்கள் குடும்பங்கள் காபூலில் உள்ள முகாம்களில் உள்ளன, அங்கு அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர். முகாம்களில் கொள்ளைகள் நடக்கிறது. பால் இல்லாததால் குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. எங்களுக்கு என்ன நடக்கிறது...
“உம்மத்” இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து...
சிந்திய ரத்தத்துக்கு தீர்வுகள் கிடைக்காமலே இங்கே மீண்டும் மீண்டும் இரத்தம் சிந்தப்படுகின்றது. இழப்பதற்கு ஏதுமில்லை என்றிருக்கும் போதே இந்த மண்ணில் மீண்டும் போர் வெடித்துவிடுகின்றது. போரை உருவாக்குபவர்கள் யார்? ஏன் உருவாக்குகிறார்கள்? ஈற்றில் போரின்...
இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை...
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன. – தி டைம்ஸ் (இங்கிலாந்து) தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக...
அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின்...
தொடக்க கால இஸ்லாம் பற்றித் தமிழ்ச் சூழலில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளிடையே இஸ்லாத்தின் தோற்றக் காலத்தையும் நபிகளாரின் பணிகளில் அரசியல்-பொருளாதாரப் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன....
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது. உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாமியப் பெண்களின் இருப்பு யாரால் அல்லது எதனால் தீர்மானிக்கப் படுகிறது என்ற கேள்வி இதுவரை நீறுபூத்துக்...
முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ்,...
சதித்திட்டங்களைத்தெரிந்துகொள்வது காலம் காலமாய் மனிதர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய விஷயம். அதனால்தான் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஏறக்குறைய அனைவருமே சதிக்கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநல) அமைச்சகம் உலகம் முழுவதும் தனது...