முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில்...
கலை என்பதன் ஆதார உணர்வு சக உயிரின் மீதான அன்பு. அதிகாரத்தின் முன் ஒரு சாமானியனுக்கு ஏற்படும் கையறுநிலை ,மொழி வழியாக கடத்தப்பெறும்பொழுது வலி ஆவணப்படுத்தப்படுகிறது. உடல்மீது நிறத்தால் உயரத்தால் பருமனால் ஊனத்தால் அதிகாரம்...
இருபது வருடங்களுக்கும் மேலாக, பெருந்தலைவர்களின் குருவாகக் கருதப்படும் ராபின் ஷர்மா, ஃபார்ச்சூன் 500 வரிசையில் இருக்கும் நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் பிரபல தொழில் முனைவோர்கள் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் இருப்பவர்களை தங்கள் துறைகளில்...
ஒருவரும் வந்து சேர ஒரு நிமிடமே போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் நாட்கள் உடனிருந்தாலும் ஒருவர் கடக்க முடியாத தொலைவை இன்னொருவருக்கு அந்த ஒரு நிமிடத்தில் கடக்க முடிகிறது என்றால் இந்தக் காதலின் மர்மப் பாதைகள்தான்...
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வாழ்வை தனக்கே உரிய பார்வையுடன் எதிர்கொள்கிறார். அனுபவத்தைக் கலையாக்கும் ரகசியத்தை அறிந்த இவர், தனது நேரடி அனுபவப் பரப்பிற்குள் வராத வாழ்வின் யதார்த்தங்களையும்...
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம்...
‘தவளையும் இளவரசியும்’ என்ற சிறுவர் புனைகதையில் வருகின்ற இளவரசி, எப்படி அந்த அசிங்கமான தவளையை முத்தமிட்டு அதை ஓர் அழகான இளவரசனாக மாற்றத் தயங்கினாளோ, அதுபோலவே, நம்முடைய கனவுகள் மெய்ப்படுவதை நம்முடைய தயக்கத்தால் நாமே...
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற...
எழுபது ஆண்டுகளுக்குமுன் வீட்டுக் கதவைத் தட்டிய, ஊர்பேர் தெரியாத விருந்தாளி சிந்திய இரத்தத்திற்காக மூன்று தலைமுறைகளாக நீளும் சங்கிலித் தொடரான பழிவாங்கல் நாடகத்தைப் புராதன கானூன் சாத்திர விதி ஜார்க்கின் குடும்பத்தில் துவக்கிவைக்கிறது. தன்...
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில்...