இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது....
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்தான். மலையாள நவீனப் புனைவிலக்கியத்தில்...
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக...
துயரம், நினைவுகள், காதல் இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் ‘கடலை’ உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு...
மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன. ஆழ்கடலின் பேரமைதியில்… மெலிதான காற்றின் தாலாட்டில்… இருளில்… ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின்...
கடல் பிரார்த்தனைக்கு உத்வேகம் அளித்தது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் பாதுகாப்பை அடைய முயன்று மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் கதையாகும்....
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம்...
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை. இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம்...