LKR. 1750 Original price was: LKR. 1750.LKR. 1570Current price is: LKR. 1570.
In stock
இளம்பரிதி இணையத்தில், அதுவும் குறிப்பாய் முகநூலில், அழகுத் தமிழில் பல கட்டுரைகளும், கவிதைகளும், பாடல்கள் குறித்த கட்டுரைகளும் எழுதப் படித்திருக்கிறேன். அதுவும் பெயருக்கேற்ப இளம் வயதிலேயே, இந்தத் தலைமுறைக்கு அதிகம் பரிச்சயமில்லாத பழைய பாடல்களையும், இசையமைப்பாளர்களையும் அவர் வியந்து எழுதும்போது, ஒரு நல்ல ரசனையாளனே சிறந்த கலைஞனாக முடியும் எனும் வாக்கியத்திற்கேற்ப ஒரு இளைஞன் கலைஞனாய் வந்து கொண்டிருக்கிறான் என்ற உவகை ஏற்படுகிறது. காட்டில் வசிப்பவன் காட்டுவாசி என்றால், பாடல்களிலேயே வசித்தும் அவற்றை ஆழ்ந்து வாசித்தும் வரும் இந்தப் பரிதி பாட்டுவாசிதான். இன்னும் பல நூல்கள் இயற்றி, எட்டுத்திக்கும் தேமதுரத் தமிழோசை பரப்ப வாழ்த்துகள்!
– அருணாச்சலம் வைத்யநாதன் (திரைப்பட இயக்குநர்)
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us