LKR. 1800 Original price was: LKR. 1800.LKR. 1530Current price is: LKR. 1530.
In stock
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுயசரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us