WordPress Themes
ஓநாய் குலச்சின்னம்

Original price was: LKR. 3500.Current price is: LKR. 3150.

Author :உலக எழுத்தாளர்கள்
Categories :உலக நாவல், மொழிபெயர்ப்பு
Subjects :சூழல்
No of Pages :672
Publication :ஏனையவை
Year :2010 - 2015

Out of stock

Out of stock

Description

இயற்கை வளங்கள் சூறையாடப்படும் இந்தச் சமயத்தில் “ஓநாய் குலச்சின்னம்” நாவல் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது ஓர் அரசியல் செயல்பாடாகும். மனிதன் பேய்மழையையும், பனிப்புயலையும் உண்டாக்கும் ஆற்றலை இந்த நூற்றாண்டின் வழியே கண்டுபிடித்ததைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறான் என்ற கேள்வியை இந்த நாவல் நம்முன்னே வைக்கிறது.

அனைத்து வளங்களையும் மட்டு மீறிப் பயன்படுத்தும் பெரு நகரங்களைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யாமல் மேலும் மேலும் நகரங்கள் உப்பிப் பெருத்துக்கொண்டே செல்கின்றன. இதற்காகக் கையகப்படுத்தப்படும் எல்லா நிலங்களிலும் பூர்வகுடிகள் இருக்கிறார்கள். அவர்கள் மெளனிக்கப்படுகிறார்கள். அந்நியர்கள் ஒரு நிலத்தைக் கையகப்படுத்துவது என்பது எவ்வளவு புரிதலின்மையோடு வழிநடத்தப்படும் என்பது ஓநாய் குலச்சின்னம் நாவலில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மங்கோலிய நாடோடிகள் ஓநாயின் இயல்புகளைக் கொண்டவர்கள். அதன் போர் வியூகங்களைக் கற்றுக்கொண்டவர்கள். அதனால்தான் அவர்களால் சீனர்களை நூறு வருடங்களுக்கும் மேல் ஆள முடிந்தது. ஓநாயின் குணத்திற்கு மிகப் பெரிய சான்றாக வரலாறு இருப்பதை நாவல் சொல்கிறது.

நாவலில் உச்சமாக, பீஜிங்கிலி ருந்து வந்த மனிதன் ஒரு ஓநாயை அதன் சிறு வயது முதல் எடுத்து வளர்க்க முயன்று தோற்றுப்போகும் பகுதி இருக்கிறது. ஓநாய்களிடமிருந்து தனித்து வைக்கப்பட்டிருந்த அது தனது ஊளையை ஆன்மாவிலிருந்து மீட்டெடுக்கும் கணங்களைப் படைப்பதன் மூலம் எழுத்தின் உச்சபட்ச சாத்தியங்களை ஜியாங் ரோங் செய்திருக்கிறார்.

இவ்வளவு சிறப்புகளையும் வெகு நேர்த்தியாகத் தமிழில் கிடைக்கும்படி செய்த சி. மோகனின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

2015ம் ஆண்டில் வெளியான சீன மொழித் திரைப்படம் Wolf Totem (Chinese: 狼图腾) இந்நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். ஜீன் ஜாக் ஆனோடு (Jean-Jacques Annaud) என்ற பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர் இதனை இயக்கியுள்ளார்.

Relate Books

மர நிறப் பட்டாம்பூச்சி

Original price was: LKR. 630.Current price is: LKR. 530.
நீண்ட இடைவெளிக்குப்பின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப்படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்தும் மொழியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு தனித்து...
Add to cart
Add to Wishlist

3 in stock

விடிவதற்குள் வா!

Original price was: LKR. 1320.Current price is: LKR. 1120.
விடிவதற்குள் வா’ என்ற நாவல் முதலில்  கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று,...
Add to cart
Add to Wishlist

Out of stock

பெருங்கனவு காணத் துணியுங்கள்!

Original price was: LKR. 1800.Current price is: LKR. 1440.
அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும்...
Read more
Add to Wishlist

சச்சின் டெண்டுல்கர்: சுயசரிதை

Original price was: LKR. 3500.Current price is: LKR. 2800.
எனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான்...
Add to cart
Add to Wishlist

Out of stock

கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா இல்லையா?

Original price was: LKR. 1860.Current price is: LKR. 1580.
தற்கால நிலைமையில் தங்களது புத்தகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. வேலைகளை உருவாக்குவது மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த கடுமையான காலகட்டத்திலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும். – டாக்டர் பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும்...
Read more
Add to Wishlist

சில்வியா

Original price was: LKR. 585.Current price is: LKR. 500.
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை...
Add to cart
Add to Wishlist