LKR. 2600 Original price was: LKR. 2600.LKR. 2210Current price is: LKR. 2210.
Out of stock
Out of stock
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா? என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. ? என் பிராரத்தனைகளின் பொருள் ஏன் எப்போதும் மாறிவிடுகிறது?
நான் நூறு மனங்களால் வாழ்கிறேன். நூறு பிறவிகளின் நூறு மரணங்களை எதிர்கொள்கிறேன். 2018 என்னை அலைக்கழிப்புகளின் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஆண்டு.. குருவிக்கூடு போன்ற எனது வாழ்விடம் கலைந்து அதை மீண்டும் தகவமைக்க முடியாமல் ஒரு அந்தர வெளியில் மிதந்துகொண்டிருக்கிறேன். தூக்கமற்ற இரவுகள்… உடல் நலம் குறித்த அச்சங்கள்.. அன்பின் ஒரு மிடறு அமுதத்தைத் தேடி பாலைவங்களில் நெடுந்தூரம் சென்றேன்… அதன் தனிமையுணர்ச்சில் மனம் உடைந்துபோனேன். இந்தத் தொகுப்பின் கவிதைகளில் உங்கள் வாழ்க்கையை நான் வாழ்ந்தேன்.
– மனுஷ்ய புத்திரன்
BukBuk வாசிப்பு ஆர்வமுள்ளவர்களை இணைக்கும் ஒரு புதிய முயற்சி. வாசிப்புடன் மாத்திரம் நின்றுவிடாது, வாசிப்புக்கு உதவும், வாசிப்பைத் தூண்டும், வாசிப்பை எளிதாக்கும், வாசிப்பை மகிழ்ச்சிகரமான ஒன்றாக்கும் அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
WhatsApp us