WordPress Themes
தண்ணீர்

Original price was: LKR. 1225.Current price is: LKR. 1040.

Author :அசோகமித்திரன்
Categories :கிளாசிக், நாவல்
Subjects :பெண்கள்
No of Pages :0
Publication :காலச்சுவடு
Year :2018

Out of stock

Out of stock

Description

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . .

“தண்ணீர்” சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை.

சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக்கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக்கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா.

நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத்தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம்.

தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக்கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும்போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக்கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளுவதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் தண்ணீர் நாவலின் முதன்மைச் சரடு.

“தண்ணீர்”, நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.

– என். கல்யாணராமன்

Relate Books

செருந்தி

Original price was: LKR. 900.Current price is: LKR. 810. Add to cart
Add to Wishlist

3 in stock

தலாய் லாமா

Original price was: LKR. 840.Current price is: LKR. 710. Add to cart
Add to Wishlist

1 in stock

நோர்வீஜியன் வுட்

Original price was: LKR. 2100.Current price is: LKR. 1780. Add to cart
Add to Wishlist

1 in stock

ஜென்: எளிமையாக வாழும் கலை

Original price was: LKR. 2700.Current price is: LKR. 2160. Add to cart
Add to Wishlist

Out of stock

குருதிப்புனல்

Original price was: LKR. 810.Current price is: LKR. 650. Read more
Add to Wishlist

Out of stock

அந்தரப் பூ

Original price was: LKR. 770.Current price is: LKR. 690. Read more
Add to Wishlist