இழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பணயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப் போல் இருக்கின்றன. இந்தக் கண்கள்...
காதல்தான் நம் காலத்தின் மாபெரும் அன்பு, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சூதாட்டம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் தனிமைஉணர்ச்சி, காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயநலம், காதல்தான். நம் காலத்தின் மாபெரும் சுயபலி,...
தரைக்கு வராத இலைகள் அந்தரத்தில் மிதக்கும்போது, அவை உதிர்ந்த கிளைகளும் அவை தொட இருக்கிற பூமிக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் என விரிகிறது இப்பெருந்தனிமை. இருபத்தோராம் நூற்றாண்டில், மனித மனம் அடையும் கலாச்சாரத் தனிமையும் மனித...
அன்பின் வழிமுறைகள் ஏன் இத்தனை பதட்டமுடையதாக இருக்க வேண்டும்? அதில் ஏன் துடைத்துத்தீராத கண்ணீர் துளிகள் துளிர்த்தவண்ணம் இருக்க வேண்டும்? காதலின் அனல்மூச்சுகளில் நம் இதயத்தின் பாறைகள் உருகும்போது பெருகும் வெள்ளத்தில் நாம் பற்றிக்கொள்ள...
மனுஷ்ய புத்திரனின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள், மனித நடத்தையிலும் மனித உறவுகளிலும் நிகழ்ந்திருக்கும் வினோதங்களைப் பற்றி உரையாடுகின்றன. நம் சமகால வாழ்வின் பல்வேறு சித்திரங்களினூடாக, நாம் எவ்வாறு நமக்கே ஒரு கேலிச்சித்திரமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை...
மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டெழுந்தவர்களின் கதைகள், நம் வாழ்விற்கு வெளிச்சமூட்டுபவை. எதிலிருந்தும் திரும்பிவரலாம் என நம்பிக்கை அளிப்பவை. மனுஷ்ய புத்திரனின் ‘வாதையின் கதை’ சிகிச்சைகால அனுபவங்களை கவித்துவ நோக்கில் விவரிக்கும் தொகுப்பு. சிகிச்சையின்...
இருபத்தொராம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த காலகட்டம் சமூக, பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளையும் இத்தொகுப்பில் உலா கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன், நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது...
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள்...