கொரோனா பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்காக 2020 ஆம் ஆண்டில் திடீரென்று நடைமுறைப்படுத்தப்பட்ட தேசியப் பொதுமுடக்கத்தால் நாடு முழுவதிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை இழந்து தவித்தனர், உண்ண உணவின்றியும் வசிக்க இடமின்றியும் அல்லாடினர். நிராதரவாக...
69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை’ என வாத்ஸாயனர் சொல்கிறார், கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முளைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69...
இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம். முக்கியமான இரு...
பெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும்...
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் “இந்த விநாடி”யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி...
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால்...
ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை. அதிகாரத்தில்...
ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த...
பிரபு கங்காதரனின் ‘காளி’ தொகுப்பு தமிழில் இதுவரை பேசியிராத தாந்த்ரீகப் பாலியல் பற்றிப் பேசுகிறது. இந்தத் தொகுப்பு தமிழ்க் கவிதை உலகில் பல நூற்றாண்டுகள் பேசப்படும். – சாரு நிவேதிதா
ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்றம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன. – எஸ். சண்முகம்
இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம்....
‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.’ – காஞ்ச அய்லய்யா இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை...
எந்த பிம்பமும் இல்லாத நவீன மனதின் நேரடியான எழுத்து… புனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைந்து உண்மையை உணர்த்துபவை . நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை . ஆண்களுக்கு சிரிப்பையும்...
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம். -ஜெயமோகன் மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள்...
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை...
“அரூ” கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த...
‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ...
ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. அல்லிக்கேணி வாழ்வின் பகுதிகள் திருப்பு முனைகளும்...
என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான்...
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும்,...
வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர். சத்தமில்லாமல், அதிராமல், நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது. நான் இப்படித்தான் இருப்பேன், அது மாறாது. புலியின்...
பழகும் எல்லா ஆண்களும் உன்னிடம் காதல் சொல்லிவிடுவதாக குறைபட்டாய் “பெண்ணிடம் நட்பாக மட்டுமே பழகமாட்டார்களா? ஆண்கள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ, ஆனால் நீ அப்படி இல்லை – அதனால் உன்னை மிகப்பிடிக்கும்” என்றாய், எச்சரிக்கும்...
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று...
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும்...
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்.
வாகனங்கள் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டன. வாகனங்கள் மூலமாக நமக்கு ஏற்படும் அனுபவங்களும், டாச்சர்களும் ஏராளம். லிஃப்ட் கொடுப்பது, குடும்பச் சுற்றுலா, டிராஃபிக் போலீஸ் என அனைத்து ஏரியாக்களையும் நகைச்சுவையுடன் அணுகுகின்றன இந்தக்...