எந்தக் கவிஞனும், எந்தக் கலைஞனும் அவனுக்கான முழு அர்த்தத்தை அவன் மட்டுமாகப் பெறுவதில்லை. அவனுடைய முக்கியத்துவம், அவன் பற்றிய மதிப்பீடு என்பது, அவனுக்கும் மறைந்த கவிஞர்கள்,கலைஞர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மதிப்பீடு தான். தனியாக...
சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவராய் ஜெர்மனி வந்த என் அப்பாவின் வரலாற்றுப் பயணத்தில், தமிழர்களுக்கான மிக முக்கிய அறிவியல் எழுத்தாளரான மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் உருவாகிய காலத்திலிருந்து அவர்கூடவே நானும் பயணித்திருக்கிறேன். அவரின்...
வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற...
தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். இன்றைய மனிதவாழ்வில் எச்சங்களாகி நிற்கும்...
பெண் என்ற அடையாளத் தன்னிலையின் சொற்கள் இவை. காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி. ஒருவகையில் இது மிகுந்த சமகாலத்தன்மையுடையது....
ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் – எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம். அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும்...
பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ‘மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத்...
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும்...
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும்...
ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ நாவல் வெளியாகிச் சுமார் அறுபதாண்டுக் காலம் ஓடிவிட்டது. திரும்பிப்பார்த்தால் இந்த நீண்ட நெடுங்காலத்தில் ‘கடலுக்கு அப்பால்’ மூன்று கட்டங்களாகத் தன் வாசகர்களை எதிர்கொண்டு வந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. வெறுமையான எளிமையாக...
கடல்புரத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனத்தில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன்...
ஒரு அதிரடி சினிமா பார்த்துவிட்டு வெளியே வருகிற அனுபவத்தை கட்டாவில் உணரலாம். வாசிப்புக்கு எடுத்த சில விநாடிகளிலேயே கட்டா காற்றாற்று வெள்ளமென பாய்ந்து செல்கிறது. த்ரில்லர் நாவலுக்குறிய முழு தகுதியையும் தாண்டி மெல்லிய காதலை...
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இது தான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி...
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு...
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சர் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வபூர்வமாக நுணுக்கமாக மனதைத் தொடும் வகையில் மற்தொரு நாவல் வந்ததில்லை. – கிரீஷ் கார்னாட்,...
உயரமான மலைகள், அழகான மலைச்சரிவு, அடர்ந்தக் காடு, அவற்றில் மேகங்களை வம்புக்கு இழுக்கும் மரங்கள் என கண்ணுக்கு விருந்து படைக்கும் காடுகளுக்குக்கிடையில் மேடும் பள்ளமுமான இடங்களில் மரக்கிளைகள், காய்ந்த புல் தட்டைகள் கொண்டு கட்டப்பட்ட...
காதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்முறை அதை ஆற்றுப்படுத்தி சமநிலை செய்தே ஆகவேண்டும். அளவில் சிறியதோ...
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ...
மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் ‘டாபிகல் கார்ட்டூன்’ ஆக அவரால் வரையவும் முடியும். பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று...
உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது. போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப்...
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்....
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின்...
கார்ல் எழுத்துக்களின் இன்னொரு முக்கியமான பண்பு அவை ideological (கருத்து நிலை) சுமையற்றவை என்பது. அவர் எந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கருத்து கூற விரும்புகிறாரோ அதற்கான கருத்தியலை, அவர் அதற்குள்ளிருந்தே உருவாக்கிக் கொள்கிறார். பெரும்பாலும்...
க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். காஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர்,...