முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை....
கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு தற்கால கன்னட இலக்கிய உலகின் போக்கை உணர்த்தக் கூடியதாக உள்ளது. மனித வாழ்வின் அவலங்களையும் குரோதங்களையும் ஏமாற்றங்களையும் நேருக்கு நேர் நின்று பேசக் கூடியவையாக இவை அமைந்துள்ளன....
புத்தம் வீடு, எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில்...
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப்...
கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான்...
வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும்...
புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப்...
ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம்...
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை...
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை நாவலை எழுதும் வேளையில் சரியென்று...
அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி,...
நீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக்...