பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின்...
என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே ‘மூத்த அகதி’ நாவலை எழுதி முடித்திருக்கிறேன்....
தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க...
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக்...
இடது சாரி இயக்கங்களோடு தன் நாற்பது வருடங்களை கரைத்திருக்கும் பவா அதில் கண்டடைந்த தன் மேய்ப்பர்களாக பல உன்னதமான கலைஞர்களை, பெரும் ஆளுமைகளை, பேச்சாளர்களை, ஓவியர்களை, நாடகக்காரர்களை களப்பணியாளர்களை நம் முன் கட்டுரைகளுக்கும் மேலான...
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன்...
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும். சோழர் காலப்...
இந்தக்கதை 1940களில் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் கைது செய்யப்பட்டு கான்சென்ட்ரேஷன் கேம்ப்களில் அடைபட்ட மனைவி, மூத்த மகள், மகன்களை விட்டுத் தப்பி ஓடி இந்தியாவின் பெங்களூரில் வந்து தஞ்சம் புகுந்த அப்பா மற்றும்...
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.
“எனது ரசிகர்கள்மற்றும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருமே இந்த நூலை வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமானதாகவும் வாழ்க்கையை உயர்த்தக்கூடிய அளவில் மிக்க பயனளிப்பதாகவும் கருதுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” – ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் மிக்க தனித்துவம் வாய்ந்த,...