‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்புகள் சிலவற்றில் சிலுவைராஜ் சரித்திரமும் ஒன்று.’ – ஜெயமோகன் தமிழின் அபூர்வமானதொரு...
இந்தியக் கோயில்களைக் கொள்ளையிட்டு, பாரம்பரியச் சிலைகளைக் கடத்திச் செல்லும் மிகப் பெரிய கிரிமினல் நெட்வொர்க்கின் நடுங்க வைக்கும் நிஜக் கதை. சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன்....
சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள்...
“தன் வாழ்வின் இருண்ட மூலைகளின் விளிம்புகளை நோக்கி விரக்தியுடன் துரத்தப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் ‘சூன்யப் புள்ளியில் பெண்’. தனக்குள் அத்தனைச் சோகத்தையும் விரக்தியையும் பிர்தவ்ஸ் கொண்டிருந்தபோதும், அவருடைய வாழ்வின் கடைசி நொடிகளை அருகில்...
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான். சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான...
மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச்...
எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும் கூர்மையும் குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது...
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி. பிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின்...
“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது,...
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர்,...
இந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள்...