இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில்...
அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற, அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள் குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய் உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று...
நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்....
புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை...
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது...
மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி, விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது. மனம் திருந்திய...
சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத்...
நேர்க்கோட்டில் போகிற ஒரு வாழ்க்கையுண்டு. அதில் தர்மங்கள் உண்டு. தர்மங்கள் குறித்த சங்கடங்கள் உண்டு. தர்மம் என்று சொல்லப்படுபவற்றை எட்டி உதைக்கும் ஒரு நிழல் உலக வாழ்வும் அந்தக் கோட்டை ஒட்டியே கிளர்ந்தெழுந்து வருகிறது....